விவேகானந்தரின் விவேக மொழிகள்
o எல்லா ஆற்றல்களும்
உங்களுள் இருக்கிறது. உங்களால் எதையும் செய்ய முடியும் என்பதை நம்புங்கள். நீங்கள்
பலவீனர்கள் என்று எண்ணாதீர்கள்.
o உன்னுள் இருக்கும்
தெய்வீகத்தை வெளிப்படுத்து. மற்றவை அதைச்சுற்றி இயைபாக ஒழுங்குபடுத்தப்படும்.
o எழுந்திருங்கள், விழித்திருங்கள். இனியும் உறங்காதீர்கள். எல்லாத்தேவைகளையும்
துன்பங்களையும் தீர்க்கும் ஆற்றல் உங்கள் ஒவ்வொருவரிடமும் இருக்கிறத. இதைப் பூரணமாக நம்புங்கள் அந்த
ஆற்றல் வெளிப்படும்.
O எல்லையற்ற
வலிமை கொண்ட ஆன்மா நான் என்று எல்லோரும் சிந்தியுங்கள். எவ்வளவு வலிமை உங்களிடம்
வெளிப்படுகிறது என்பதை அப்போது காண்பீர்கள்.
o கீழ்படிந்து
நடந்துகொள்ளுங்கள்.சத்தியத்திற்கும், மனிதகுலத்திற்கும்,உங்கள்
நாட்டிற்கும் உண்மையாக நடந்துகொள்ளுங்கள்: உலகத்தையே அசைத்து விடுவீர்க்ள்.
o மனம் சோர்ந்து விடாதீர்கள். பாதை மிகவும் கடினமானது; கத்திமுனையில் நடப்பது போன்றது. ஆனாலும் சோர்வடையாதீர்கள்.
o எழுந்திருங்கள், விழித்திருங்கள், குறிக்கோளை, லட்சியத்தை அடைந்தே
தீருங்கள்.
o மிருகபலத்தால்
ஒரு போதும் உயர்வு பெறமுடியாது.ஆன்மிக பலத்தால் மட்டுமே நாம் எமுச்சி பெற முடியும். நாம் அனைவரும் மகத்தான பணிகளைச்
செய்யவே பிறந்திருக்கிறோம்.
o மேலைநாட்டு
விஞ்ஞானத்தையும் நம் நாட்டு வேதாந்தத்தையும் இணையுங்கள். இவை இரண்டுமே வாழ்வின் அடிப்படை
லட்சியங்களாகும்.
o யார்
ஒருவர் எதைப்பெறுவதற்குத் தகுதி உடையவராக இருக்கிறாரோ அதை அவர் பெறவிடாமல் தடுத்து
நிறுத்துவதற்கு இந்தப் பிரபஞ்சத்தில் உள்ள எந்த சக்தியாலும் முடியாது.
o துன்பம்
விளைவதற்கு அறியாமையைத் தவிர வேறு எதுவுமே காரணமில்லை. இந்த உண்மையைப் பட்டபகல்
வெளிச்சத்தைப் போல என்னால் தெளிவாக புரிந்துக் கொள்ளமுடிகிறது.
o ஆயிரம்
முறை தோல்வியுற்றாலும் லட்சிய நோக்கிலிருந்து பின்வாங்காதீர்கள். போராட்டங்களையும் தவறுகளையும்
பொருட்படுத்தாதீர்கள். லட்சியப்பாதையில் வீறுநடைபோடுங்கள்.
o அறிவு
வளர்ச்சிக்கு ஒரே ஒரு வழிமுறை தான் இருக்கின்றது.நம்முடைய மனத்தை ஒரு முகப்பபடுத்துவதே
அந்த வழி.
o எதையும்
வெறும் பரபரப்புடன் மட்டும் அணுகுவது கூடாது.
தூய்மை,
பொறுமை,
விடாமுயற்சி என்ற இம்முன்றினையும் பின்பற்றினால் வெற்றிச்
சிகரத்தை எட்டிப்பிடிக்கலாம்.
o மூளை - தசைகள் - நரம்புகள் என்று உன் உடலின்
ஒவ்வொரு பாகத்திலும் அந்த ஒரு கருத்தினையே பரவ விடுங்கள். மற்ற எந்த கருத்தினையும்
உங்கள் மனத்திற்குள் நுழைய அனுமதிக்காதீர்கள்.
o நாம்
நினைக்கும் எண்ணங்கள் யாவும் விதை வடிவத்தை பெற்று பின்னர் நம் சூட்சம சரீரத்தில் சிறிது
காலத்திற்கு தங்கி பின்னர் வெளிப்பட்டு வந்து அதற்குரிய பலன்களைத் தருகின்றன. இந்தப் பலன்களே மனிதனுடைய
வாழ்க்கையை நிர்ணயிக்கின்றன.
o ஒரு நல்ல
கருத்தை எடுத்துக் கொள்ளுங்கள் - அந்த ஒரு கருத்தையே உங்கள் வாழ்க்கை மயமாக்குங்கள். அக்கருத்தையே நாளும் கனவு
காணுங்கள். அக்கருத்தை
முன்னிறுத்தியே வாழ்க்கையை நடத்துங்கள். வாழ்க்கை சொர்க்கமாகும்.
o மற்றவர்களின்
தெய்வீக இயல்பை வெளிப்படுத்த உதவி செய்வது தான். நம்முடைய தெய்வீக இயல்பை வெளிப்படுத்துவதற்கான
ஒரே வழியாகும்.
o பொய்
சொல்வது சாதாரண விஷயம் அல்ல. அது ஒரு கலை.பொய் சொல்ல அசாத்திய திறமை வேண்டும். ஏராளமான ஞாபக சக்தி வேண்டும். ஆனால் பொய் சொல்லி பிறரை
ஏமாற்றுபவர்கள் மற்ற ஏமாற்றுக்காரர்களாலேயே பாடம் பெறுவார்கள்.
o துக்கம்
என்பது அறியாமையின் காரணமாகத்தான் ஏற்படுகிறது.வேறு எதனாலும் அன்று.
o கடலைக்
கடக்கும் இரும்பு போன்ற மன உறுதியும்; மலைகளையே துளைத்துச் செல்லும்; வலிமை தோள்களுமே; நமக்குத்தேவை.வலிமைதான் வாழ்வு பலவீனமே மரணம். மிகப்பெரிய இந்த உண்மையை உணந்து கொள்ளுங்கள்.
No comments:
Post a Comment