அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் | |
பாடல் 1 -- விநாயகர் துதி | |
ராகம் - நாட்டை; தாளம் - ஆதி | |
தத்தன தனதன தத்தன தனதன | |
தத்தன தனதன ...... தனதான | |
கைத்தல நிறைகனி அப்பமொ டவல்பொரி | |
கப்பிய கரிமுகன் ...... அடிபேணிக் | |
கற்றிடும் அடியவர் புத்தியில் உறைபவ | |
கற்பகம் எனவினை ...... கடிதேகும் | |
மத்தமு மதியமும் வைத்திடும் அரன்மகன் | |
மற்பொரு திரள்புய ...... மதயானை | |
மத்தள வயிறனை உத்தமி புதல்வனை | |
மட்டவிழ் மலர்கொடு ...... பணிவேனே | |
முத்தமிழ் அடைவினை முற்படு கிரிதனில் | |
முற்பட எழுதிய ...... முதல்வோனே | |
முப்புரம் எரிசெய்த அச்சிவன் உறைரதம் | |
அச்சது பொடிசெய்த ...... அதிதீரா | |
அத்துய ரதுகொடு சுப்பிர மணிபடும் | |
அப்புன மதனிடை ...... இபமாகி | |
அக்குற மகளுடன் அச்சிறு முருகனை | |
அக்கண மணமருள் ...... பெருமாளே. | |
பாடல் 3 விநாயகர் | |
ராகம் - ஹம்ஸத்வனி / ஆனந்தபைரவி; தாளம் - அங்கதாளம் (8) | |
தகதகிட-2 1/2, தகதகிட-2 1/2, தகதிமிதக-3 | |
தந்ததனத் தானதனத் ...... தனதான | |
உம்பர்தருத் தேநுமணிக் ...... கசிவாகி | |
ஒண்கடலிற் றேனமுதத் ...... துணர்வூறி | |
இன்பரசத் தேபருகிப் ...... பலகாலும் | |
என்றனுயிர்க் காதரவுற் ...... றருள்வாயே | |
தம்பிதனக் காகவனத் ...... தணைவோனே | |
தந்தைவலத் தாலருள்கைக் ...... கனியோனே | |
அன்பர்தமக் கானநிலைப் ...... பொருளோனே | |
ஐந்துகரத் தானைமுகப் ...... பெருமாளே. | |
பாடல் 6 (நூல்) | |
ராகம் - கெளளை; தாளம் - திஸ்ரத்ருபுடை (7) / மிஸ்ரசாபு (3 1/2) | |
தத்தத்தன தத்தத் தனதன | |
தத்தத்தன தத்தத் தனதன | |
தத்தத்தன தத்தத் தனதன ...... தனதான | |
முத்தைத்தரு பத்தித் திருநகை | |
அத்திக்கிறை சத்திச் சரவண | |
முத்திக்கொரு வித்துக் குருபர ...... எனவோதும் | |
முக்கட்பர மற்குச் சுருதியின் | |
முற்பட்டது கற்பித் திருவரும் | |
முப்பத்துமு வர்க்கத் தமரரும் ...... அடிபேணப் | |
பத்துத்தலை தத்தக் கணைதொடு | |
ஒற்றைக்கிரி மத்தைப் பொருதொரு | |
பட்டப்பகல் வட்டத் திகிரியில் ...... இரவாகப் | |
பத்தற்கிர தத்தைக் கடவிய | |
பச்சைப்புயல் மெச்சத் தகுபொருள் | |
பட்சத்தொடு ரட்சித் தருள்வதும் ...... ஒருநாளே | |
தித்தித்தெய ஒத்தப் பரிபுர | |
நிர்த்தப்பதம் வைத்துப் பயிரவி | |
திக்கொட்கந டிக்கக் கழுகொடு ...... கழுதாடத் | |
திக்குப்பரி அட்டப் பயிரவர் | |
தொக்குத்தொகு தொக்குத் தொகுதொகு | |
சித்ரப்பவு ரிக்குத் த்ரிகடக ...... எனவோதக் | |
கொத்துப்பறை கொட்டக் களமிசை | |
குக்குக்குகு குக்குக் குகுகுகு | |
குத்திப்புதை புக்குப் பிடியென ...... முதுகூகை | |
கோட்புற்றெழ நட்பற் றவுணரை | |
வெட்டிப்பலி யிட்டுக் குலகிரி | |
குத்துப்பட ஒத்துப் பொரவல ...... பெருமாளே. | |
ஏறுமயில் ஏறி விளையாடும் முகம் ஒன்றே! | |
ஈசருடன் ஞானமொழி பேசும் முகம் ஒன்றே! | |
கூறும் அடியார்கள் வினை தீர்க்கும் முகம் ஒன்றே! | |
குன்று உருவ வேல் வாங்கி நின்ற முகம் ஒன்றே! | |
மாறுபடு சூரரை வதைத்த முகம் ஒன்றே! | |
வள்ளியை மணம் புணர வந்த முகம் ஒன்றே! | |
ஆறுமுகம் ஆன பொருள் நீ! அருள வேண்டும்! | |
ஆதி அருணாசலம் அமர்ந்த பெருமாளே! | |
பாடல் தொகுப்பு: திருப்புகழ் | |
இயற்றியவர்: ஓசைமுனி அருணகிரிநாதப் பெருமான் |
PG Teacher,
Government Higher Secondary School, Sathankulam,
Ramanathapuram- Dist.
Wednesday, 9 January 2013
திருப்புகழ்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment