Wednesday, 5 December 2012

cooking notes 2



கறிவேப்பிலை சட்னி


தேவையான பொருட்கள்

கறிவேப்பிலை - 1 கட்டு
சின்ன வெங்காயம் - 1 கோப்பை
தக்காளி - 1
பச்சை மிளகாய் - 2
கடலைப்பருப்பு - 1/2 தேக்கரண்டி
உடைத்த உளுந்து - 1/2 தேக்கரண்டி
புளி - 1 கொட்டை அளவு
தேங்காய் துருவல் - 1 மேஜைக்கரண்டி
பூண்டு - 4 பல்லு
இஞ்சி - 1 துண்டு
உப்பு - தேவையான அளவு
தாளிக்க

கடுகு - 1/2 தேக்கரண்டி
கடலைப்பருப்பு - 1/4தேக்கரண்டி
உடைத்த உளுந்து - 1/4 தேக்கரண்டி
பெருங்காயம் - சிறிது
எண்ணெய் - 1 தேக்கரண்டி
கறிவேப்பிலை - 1 கொத்து


செய்முறை

1.
சிறிது எண்ணெயை விட்டு கருவேப்பிலையை நன்றாக வறுத்துக்கொள்ளவும்.

2.
வாணலியில் சிறிது எண்ணெயைவிட்டு கடலைபருப்பையும் உளுந்தையும் சிவக்க வறுத்துக் கொள்ளவும்.

3.
பிறகு அதில் வெங்காயத்தைக் கொட்டி சிவக்க வதக்கவும்.

4.
அதனுடன் தக்காளி, பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு போட்டு, பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.

5.
பிறகு அதில் புளியைச் சேர்க்கவும்.

6.
பின்னர் இறக்கிவைத்து தேங்காய் துருவலைச் சேர்த்து ஆறவைக்கவும்.

7.
பிறகு அனைத்தையும் சேர்த்து கெட்டியாக அரைக்கவும்.

8.
அடுத்து தாளிக்கும் பொருள்களைக் கொண்டு தாளிக்கவும்.
குறிப்பு:

1.
இறக்கும் போது ஒரு தேக்கரண்டி நெய்விட்டு இறக்கினால் வாசனையாக இருக்கும்.
கொத்தமல்லி சட்னி

தேவையான பொருட்கள்

கொத்தமல்லித்தழை - 1 கட்டு
தேங்காய் - 1/4 மூடி
பச்சை மிளகாய் - 3 அல்லது 4
உப்பு - தேவையான அளவு


தாளிக்க

கடுகு - 1/2 தேக்கரண்டி
கடலைப்பருப்பு - 1/2 தேக்கரண்டி
உடைத்த உளுந்து - 1/2 தேக்கரண்டி
பெருங்காயம் - சிறிது
எண்ணெய் - 1 தேக்கரண்டி
கறிவேப்பிலை - 1 கொத்து
செய்முறை

1.
கொத்தமல்லித்தழையை நன்கு நீரில் கழுவி, துருவிய தேங்காய், பச்சை மிளகாய், உப்பு சேர்த்து கெட்டியாக அரைத்துக் கொள்ளவும்.

2.
பிறகு தாளிக்கும் பொருள்களைப் போட்டு தாளித்து அரைத்த வைத்துள்ள விழுதில் சேர்த்து பரிமாறவும்
குறிப்பு

1.
தாளிக்கும் போது ஒரு தேக்கரண்டி நெய்விட்டு இறக்கினால் வாசனையாக இருக்கும்.
கொத்தமல்லி சட்னி (செய்முறை-2)


தேவையான பொருட்கள்

கொத்தமல்லித் தழை - 1/4 கட்டு
தேங்காய் - 1/4 கோப்பை
சின்ன வெங்காயம் - 100 கிராம்
தக்காளி (சிறியது) - 1
பச்சை மிளகாய் - 2
உப்பு - 1/2 தேக்கரண்டி
தாளிக்க

கடுகு - 1/2 தேக்கரண்டி
கடலைப்பருப்பு - 1/2 தேக்கரண்டி
உடைத்த உளுந்து - 1/2 தேக்கரண்டி
பெருங்காயம் - 1 சிட்டிகை
எண்ணெய் - 1 தேக்கரண்டி
கறிவேப்பிலை - 1 கொத்து
செய்முறை

1.
கொத்தமல்லித்தழையை ஆய்ந்து கழுவிப் பொடியாக வெட்டிக் கொள்ளவும்.

2.
சின்ன வெங்காயத்தை இரண்டாக நறுக்கிக் கொள்ளவும்.

3.
தக்காளியையும், பச்சை மிளகாயையும் தனியே நறுக்கிக் கொள்ளவும்

4.
தேங்காயை தனியே துருவிக் கொள்ளவும்.

5.
வாணலியை அடுப்பில் வைத்து இரண்டு தேக்கரண்டி எண்ணெய் விட்டு காய்ந்ததும் சிறிது கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு போட்டு சிவந்ததும் வெங்காயத்தைப் போட்டு வதக்கவும்.

6.
பிறகு தக்காளி, பச்சை மிளகாய் போட்டு வதக்கவும்.

7.
பிறகு புளி, துருவிய தேங்காயைப் போட்டு விட்டு, நறுக்கிய கொத்தமல்லித் தழையைப் போட்டு சிறிது நேரம் வதக்கி இறக்கவும்.

8.
இதனை சூடு ஆற வைத்து கொஞ்சம் கரகரப்பாக அறைக்கவும்.

9.
பிறகு கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, பெருங்காயம், கருவேப்பிலைப் போட்டு தாளிக்கவும்.
குறிப்பு

1.
தாளிக்கும் போது ஒரு தேக்கரண்டி நெய்விட்டு இறக்கினால் வாசனையாக இருக்கும்.
பொட்டுக்கடலை சட்னி


தேவையான பொருட்கள்

பொட்டுக்கடலை - 1 கோப்பை
தேங்காய் துருவல் - 1 கோப்பை
பூண்டு - 3 பல்லு
இஞ்சி - 1 துண்டு
கறிவேப்பிலை - 1 கொத்து
கொத்தமல்லித்தழை - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
தாளிக்க

கடுகு - 1/2 தேக்கரண்டி
கடலைப்பருப்பு - 1/2 தேக்கரண்டி
உடைத்த உளுந்து - 1/2 தேக்கரண்டி
பெருங்காயம் - சிறிது
எண்ணெய் - 1 தேக்கரண்டி
கறிவேப்பிலை - 1 கொத்து


செய்முறை

1.
பொட்டுக்கடலை, தேங்காய், பச்சை மிளகாய், பூண்டு, இஞ்சி, கருவேப்பிலை, உப்பு, கொத்தமல்லித் தழை அனைத்தையும் கரகரப்பாக அரைக்கவும்.

2.
பிறகு தாளிக்கும் பொருட்களைப் போட்டு தாளித்துப் பரிமாறவும்.
குறிப்பு

1.
பச்சை மிளகாய்க்கு பதிலாக வர மிளகாய் போட்டு அரைக்கலாம். சப்பாத்தி கோதுமை தோசைக்கு நன்றாக இருக்கும்.

2.
இரண்டு மூன்று புதினா தழை சேர்த்து அரைத்தால் வாசனையாக இருக்கும்.
வெங்காய சட்னி

தேவையான பொருட்கள்

வெங்காயம் - 200 கிராம்
தக்காளி - 2
பூண்டு - 3 பல்லு
இஞ்சி - 1 துண்டு
உப்பு - தேவையான அளவு
தாளிக்க

கடுகு - 1/2 தேக்கரண்டி
கடலைப்பருப்பு - 1/2 தேக்கரண்டி
உடைத்த உளுந்து - 1/2 தேக்கரண்டி
பெருங்காயம் - சிறிது
எண்ணெய் - 1 தேக்கரண்டி
கறிவேப்பிலை - 1 கொத்து


செய்முறை

1.
வெங்காயம், தக்காளி, இஞ்சி, பூண்டு, இவை அனைத்தையும் கெட்டியாக அரைத்துக் கொள்ளவும்.

2.
பிறகு தாளிக்கும் பொருள்களைப் போட்டு தாளித்து அரைத்த விழுதை அதில் சேர்த்து, பச்சை வாசனை போகும்வரை வதக்கி இறக்கவும்.
குறிப்பு

1.
இறக்கும் போது ஒரு தேக்கரண்டி நெய்விட்டு இறக்கினால் வாசனையாக இருக்கும்.
தேங்காய் சட்னி


தேவையான பொருட்கள்

பொட்டுக்கடலை - 1 கோப்பை
தேங்காய் - 1 மூடி
பொட்டுக்கடலை - 2 தேக்கரண்டி
பச்சை மிளகாய் - 2
பூண்டு - 3 பல்லு
இஞ்சி - 1 துண்டு
உப்பு - தேவையான அளவு
தாளிக்க

கடுகு - 1/2 தேக்கரண்டி
கடலைப்பருப்பு - 1/2 தேக்கரண்டி
உடைத்த உளுந்து - 1/2 தேக்கரண்டி
பெருங்காயம் - சிறிது
எண்ணெய் - 1 தேக்கரண்டி
கறிவேப்பிலை - 1 கொத்து
செய்முறை

1.
தேங்காய், பொட்டுக்கடலை, புளி, பூண்டு, இஞ்சி, பச்சைமிளகாய் அனைத்தையும் மிக்ஸியில் போட்டு கரகரப்பாக அரைத்தெடுக்கவும்.

2.
பிறகு தாளிக்கும் பொருள்களைப் போட்டு தாளித்து பரிமாறவும்.

No comments:

Post a Comment